ஆந்திராவில் உள்ள நந்தியாலா பகுதியில் பிரபலமான அவுக்கு ஏரி அமைந்துள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரிக்கு செல்லும் நிலையில், இன்று ஒரு படகில் 15-க்கும் மேற்பட்டோர் ஏறியுள்ளனர். இந்த படகு ஏரியின் நடுவே சென்றபோது திடீரென கவிழ்ந்தது.
இதில் நீச்சல் தெரிந்த சிலர் மட்டும் நீந்தி கரைக்கு வந்து சேர்ந்த நிலையில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 2 குழந்தைகளின் சடலத்தை மீட்டுள்ளனர். அதன் பிறகு நீரில் மூழ்கி மாயமான 10 பேரை வலை வீசி தேடி வருகிறார்கள். அண்மையில் கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 22-க்கும் மேற்பட்டோர் உயரிழந்த நிலையில் தற்போது ஆந்திராவிலும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.