இந்தியாவின் புது கல்விக்கொள்கையை நடைமுறைபடுத்தும் நோக்கத்தில் மத்திய-மாநில அரசுகள் கல்வித் துறையில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரோபோட்டிக் பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சென்ற வருடம் தலைநகர் டெல்லியில் ரோபோட்டிக் லீக் நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது.

பள்ளி மாணவர்கள் மத்தியில் ரோபாட்டிக்ஸ் திறன்களை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு இப்போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் டெல்லியிலுள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இப்போது டெல்லியிலுள்ள IIT பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பற்றிய பயிற்சியளிக்க திட்டமிட்டு உள்ளது.

இவற்றில் 100-க்கும் அதிகமான பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு 2 மாதங்களுக்கு இந்த ரோபோடிக்ஸ் பயிற்சியளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் ஜன,.26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் அடிப்படையில் மட்டுமல்லாது, அன்றாட வாழ்வில் ரோபோட்டிக்ஸை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் கற்றுத் தரப்படவுள்ளது.