திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக செல்வார்கள். பழனி முருகப்பெருமானை தரிசிக்க பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு விபத்தில் சிக்காமல், இரவில் செல்வதற்கு உதவும் வகையில் ஒளிரும் பட்டைகள்(torch light) வழங்கப்படுகிறது.

இதனை பக்தர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி பல்லடம் பனப்பாளையம் பகுதியில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்வில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், ஆய்வாளர்கள் நிர்மலாதேவி, ஈஸ்வரன் மற்றும் பல்லடம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு போன்ற பலர் கலந்துகொண்டனர். திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத் கலந்து கொண்டு பாத யாத்திரை பக்தர்களுக்கு இரவில் ஒளிரும் பட்டை, பிஸ்கட், குடிநீர், தேநீர் உள்ளிட்டவைகளை வழங்கினார்.