இலங்கையை சேர்ந்த பூர்வீக தமிழரான முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்து வந்தார். அவரது வாழ்க்கை “800” எனும் தலைப்பில் திரைப்படமாக தயாராக இருந்தது. இதில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அதற்குரிய கிரிக்கெட் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் முத்தையா முரளிதரன் தமிழர்களின் நலனுக்கு எதிரானவர் என சொல்லி சில அமைப்புகள் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விஜய் சேதுபதி படத்தில் நடிக்கத் தங்கி அதிலிருந்து வெளியேறினார். இப்போது அந்த படம் மீண்டும் உருவாகி வருகிறது. அதன்பின் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்த மதுர் மிட்டல் நடிக்கிறார். மேலும் நரேன், நாசர், வேல ராம மூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள்தாஸ், ஹரிகிருஷ்ணன், யோக் ஜேபி, சரத் லோஹி தாஷ்வா உட்பட பலர் நடிக்கின்றனர்.