தமிழ் திரையுலகில் பிரபல ஜோடியாக ஸ்னேகா-பிரசன்னா வலம் வருகிறார்கள். காதலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த 2012-ல் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். திருமணத்துக்கு பின் அவர்கள் இருவரும் நியூசிலாந்துக்கு ஹனிமூன் சென்று உள்ளனர்.

இந்நிலையில் குஷி பட விஜய் போன்று Bungee jumping செய்யவேண்டும் என்று பிரசன்னா கேட்டுள்ளார். அதற்கு என் பெயரை டாட்டூ போட்டால் Bungee jumping செய்ய ஒப்புக்கொள்வதாக சினேகா கண்டிஷன் போட்டுள்ளார். உடனடியாக பிரசன்னா அங்கிருந்த கடையில் டாட்டூ போட்டுக்கொண்டாராம். அதன்பின் இருவரும் ஜோடியாக Bungee jumping-ல் குதித்துள்ளனர்.