உள்நாட்டுப் போர் காரணமாக நிலைகுலைந்து இருக்கும் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பெரும்பாலான அகதிகள் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்தான கடன் பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் ஆப்பிரிக்காவிலிருந்து 80 பேருடன் ஐரோப்பா சென்றுகொண்டிருந்த  படகு லிபியா கடல் பகுதியில் மூழ்கியதில் 73 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அதே நேரம் நீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதோடு இறந்த 11 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த செய்தி அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.