தற்போது பான்கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பான் கார்டு அனைத்து வகை நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இவ்வளவு முக்கியமான ஒரு ஆவணத்தை நீங்கள் எங்காவது தொலைந்து விட்டால் பெரும் பின் விளைவுகளை சந்திக்கும்படி ஆகிவிடும். ஒரு தனி நபர் (அ) நிறுவனத்தின் வரிப்பொறுப்பை மதிப்பிடுவது உள்ளிட்ட அனைத்து வித பரிவர்த்தனையையும் வருமான வரி ஆணையம் பான்கார்டை வைத்து தான் கண்காணிக்கிறது.
இந்நிலையில் நம் பான் கார்டை தொலைத்துவிட்டால் ரூபாய்.10,000 அபராத தொகை செலுத்தவேண்டும். அதோடு 2 பான் கார்டுகளை வைத்திருந்தாலும் அபராதம் செலுத்தவேண்டும். வருமான வரித் துறையின் விதிப்படி, பான் கார்டை ரத்துசெய்து தண்டனையாக அபராதம் விதிக்கும். மேலும் பான் எண்ணில் பிழை ஏற்பட்டால் வங்கிக்கணக்கு முடக்கப்படலாம். அதன்பின் பான்கார்டு உடனே வருமான வரித் துறைக்கு அனுப்பப்பட வேண்டும். தவறான பான் தகவலை வழங்கும் நபருக்கு வருமான வரித் துறை ரூ.10,000 அபராதம் விதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.