குஜராத் கலவரம் குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை யூடியூப் நிறுவனம் தளத்திலிருந்து நீக்கியுள்ளது. இந்த ஆவண படத்துக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது youtube நிறுவனம் அதை தளத்தில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் பிரதமர் மோடி முதல்வராக இருந்த சமயத்தில் ஏற்பட்ட கலவரத்தை மையப்படுத்தி ஆவணப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடிக்கும் இஸ்லாமிய சமுதாயத்தினருக்கும் இடையிலான பதற்றம் குறித்தும் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் பலரும் விமர்சித்து வந்தனர். இதன் காரணமாக இந்த வீடியோவுக்கு மத்திய அரசு கடும் கண்டனங்களை தெரிவித்தது. இந்த ஆவணப்படம் இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரத்திற்காக உருவாக்கப்பட்டதாக வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி குற்றம் சாட்டியிருந்தார். இந்த ஆவணப்படம் கண்ணியமானது அல்ல என்றும், காலணி ஆதிக்க மனோபாவம் இன்னமும் தொடர்வதாக காண்பிப்பதாக்வும் குற்றம் சாட்டி இருந்தார். மேலும் இந்த வீடியோவை இந்தியாவில் ஒளிபரப்ப அனுமதி வழங்க முடியாது என்று கூறியிருந்த நிலையில் தற்போது youtube நிறுவனம் ஆவணப்படத்தை தளத்தில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.