சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது அதுபோன்ற ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு குரங்கு கட்டப்பட்டு இருப்பதையும், நாகப் பாம்பு படம் எடுத்து ஆடுவதையும் காணலாம்.

அப்போது திடீரென சங்கிலியால் கட்டப்பட்ட நிலையிலும், குரங்கு பாம்பின் முன்பு குதித்து அதன் வாலை அசால்டாக இழுக்கிறது. மேலும் பாம்பை பாடாய்படுத்துகிறது அக்குரங்கு. எனினும் நாகப்பாம்பு ஒன்றும் செய்யவில்லை. இது உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமாக உள்ளது. மேலும் வீடியோவின் இறுதியில் மற்றொரு நாகப் பாம்பும் அங்கிருப்பது தெரிகிறது.