செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நம்முடைய தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கின்ற தளபதி அவர்கள் இதுவரை வரலாறுலே இல்லாத வகையில் மீனவர்களுக்கென்று தனி மாநாடு கண்ட முதலமைச்சராக நம்முடைய முதலமைச்சர் ராமநாதபுரத்தில் அந்த மாநாட்டை நடத்தினார்கள். அந்த மாநாட்டிலே பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்கள். இந்த அத்தனை வாக்குறுதிகளும்,  அதை நடைமுறைப்படுத்தவும் வகையிலே இன்றைக்கு செயல்பட ஆரம்பித்திருக்கிறார்.

அதிலே குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மீன்பிடி தடை கால நிவாரணமாக கடந்த காலங்களிலே 5000 ரூபாயாக இருந்ததை 8,000 ரூபாயாக உயர்த்துவேன் என்ற வகையிலே அறிவித்தார். அதற்கான அரசாணை வந்துவிட்டது. அதேபோல 60 வயதுக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க தடைகால நிவாரணம் வழங்கலாம் என்ற ஒரு திட்டத்தை வழங்குவதற்கும் அரசாணை வழங்கப்பட்டிருக்கின்றது.

அதுபோல நாட்டு படகுக்கு வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய்னை அளவை ஆண்டுக்கு 3400 லிட்டரில் இருந்து 3700 லிட்டராக உயர்த்துவேன் என்ற வகையிலே  சொன்னார்கள்.   அதற்கான அரசனையும் வழங்கப்பட்டிருக்கிறது. நாட்டுப் படகுகளுக்கு வழங்கப்படும் வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசலை ஆண்டுக்கு 4000 லிட்டரில் இருந்து 4400 லிட்டராகவும், விசைப்படகுகளுக்கு  18000 லிட்டரில் இருந்து 19 ஆயிரம் லிட்டராக உயர்த்தி வழங்குவேன் என்ற வகையில்  அறிவித்தார்கள். அதற்கான அரசாணையும்  வழங்கப்பட்டிருக்கிறது.

அதுபோல ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தில் மீன் இறங்குதளம்,  குந்துகால் மீன்இறங்கு தள அலை தடுப்பு சுவர்,  பாம்பன் மீனவ கிராமத்தில் அலை தடுப்பு சுவர் உடன் கூடிய மீன்இறங்கு தளம் அமைப்பதற்கான ஆய்விடங்களை உடனடியாக தொடங்குவேன் என்று சொன்னார்கள். அதற்கான அரசாணை வழங்கி அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

மீன்பிடிகையில் காணாமல் போகும் மீனவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கசுழல்  நிதி ஏற்படுத்துவேன் என்ற வகையிலே அறிவித்தார்கள். அதற்கான சுழல் நிதியும் இன்றைக்கு ஏற்படுத்தி அதற்கு  அரசாணை வழங்கியிருக்கிறார்கள். மீனவர்கள் இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் மதிப்பீட்டுத் தொகையை 1.7 லட்சத்திலிருந்து  2.4 லட்சமாக உயர்த்துவேன் என்ற வகையிலே வாக்குறுதி அளித்தார்கள்.

அதுவும் இன்று அரசாணை வழங்கப்பட்டிருக்கின்றது. அதுபோல கடலோர உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக    கடலோர மேலாண்மை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற வகையிலே நமது முதலமைச்சர்கள் சொன்னார்கள், அதற்கான அரசனையும் வழங்கப்பட்டிருக்கிறது. மீனவ இலவச வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்ட 5035 வீடுகளுக்கு பட்டா வழங்குவதற்கான அறிவிப்பும் வெளியிட்டார்கள். அதற்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடலோரப் பகுதிகளில் இருக்கின்ற மீனவர்களுக்கான பட்டாவும் வழங்கப்பட்டிருக்கின்றது. அது போல 45 ஆயிரம் மீனவர்களுக்கு கூட்டுத் துறையின் மூலமாக கடன் வழங்குவேன் என்று அறிவித்துள்ளார்கள். அதையும் இன்று நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வார காலத்தில் மீன் குறைவு காலத்திற்கான 6000 ரூபாய் மீனவர்களுக்கு வழங்குகின்ற திட்டமும் வெகு சீக்கிரத்திலே நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற வகையிலே மாண்புமிகு முதலமைச்சர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.