அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த குறும்பட பிரிவில் இந்திய குறும்படமான The Elephant Whisperers என்ற படம் ஆஸ்கார் விருதை வென்றது. இந்த படத்தை இயக்கிய கார்த்திகி மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் ஆஸ்கார் விருதை வென்றனர். இந்த ஆவணப்படம் தமிழ்நாட்டில் உள்ள முதுமலை தெப்பக்காட்டில் உள்ள யானைகள் முகாமினை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த குறும்படத்திற்கு நேற்று ஆஸ்கார் விருது கிடைத்த நிலையில் படத்தில் இருந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகிய இடங்களை பார்ப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது. மேலும் படத்திலிருந்த இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை நேரடியாக பார்த்து ரசிப்பதற்காக முதுமலை தெப்பக்காடு பகுதிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது.