கர்நாடக மாநிலத்தில் மே 10-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் போட்டியிட விரும்புகிறார்கள். இதற்காக தமிழர்கள் வசிக்கும் சில பகுதிகளை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யும்படி இபிஎஸ் தரப்பில் பாஜகவிடம் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் தற்போது ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பாஜக கட்சியின் மூத்த தலைவருமான எடியூரப்பாவை சந்தித்து பேசியுள்ளார்.

அவரிடம் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சட்டசபை தேர்தல் குறித்து பேசியதாகவும் தமிழர்கள் வசிக்கும் சில பகுதிகளை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு புகழேந்தி கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்போது அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் வசம் இருக்கும் நிலையில் தாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறும் ஓபிஎஸ் தரப்பு கூறுகிறார்கள். இந்த நிலையில் தற்போது கர்நாடக மாநில தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு போட்டியிட ஆர்வம் காட்டுவதால் அதிமுக விவகாரம் கர்நாடக வரை ஒலிக்கும் என்று கூறப்படுகிறது.