ரஃபா எல்லை வழியாக  நிவாரண பொருட்கள் அடங்கிய லாரிகளை அனுமதிக்க வேண்டும் என தொடர்ச்சியாக  எகிப்து நாடு கேட்டுக் கொண்டது. இதன் அடிப்படையில் தற்போது 20 லாரிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ச்சியாக இஸ்ரேல் உடைய தாக்குதலும் காசநகரத்தில் 15வது நாளாக அதிகரித்து வருகிறது. வடக்கு பகுதி மற்றும் லெபனான் எல்லையை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியிருக்கிறார்கள்.

இந்நிலையில் ரஃபா எல்லை பகுதிகளில் விமானப்படை தாக்குதல் ஏதும் நடத்த வேண்டாம் என அமெரிக்க இஸ்ரேலிடம் கூறியுள்ளது. நிவாரண பொருட்கள் சரியாக காசா பகுதிக்கு செல்ல வேண்டும். அங்கு அவை பிரித்து அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் 23 லட்சம்  பாலஸ்தீன மக்கள் வசிக்கும் இந்த பகுதிகளில் வெறும் 20 டிரக் லாரிகள் மட்டும் போதுமான அளவு இருக்குமா ? என கேள்வியும் எழுப்பப்படுகிறது.