காசாவில் தற்போது குடிநீர்,  உணவு பச்சக்குறை உச்சத்தில் இருக்கிறது என ஐநா தெரிவித்துள்ளது.

எகிப்த் எல்லையில் உள்ள ரஃபா வழியே 20 ட்ரக் லாரிகளில் நிவாரண  நிவாரணப் பொருட்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு, குடிநீர், மருந்து பொருட்களுக்கு மட்டும் இவை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் ஐநா ஒரு முக்கியமான ஒரு விஷயத்தை தெரிவித்து இருக்கிறார்கள். காசா நகரத்தில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு லிட்டருக்கும் குறைவான தண்ணீர் மட்டுமே கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது. சராசரியாக காசா நகரத்தில் ஒரு நாளைக்கு 84 லிட்டர் அளவிற்கு தண்ணீர் கிடைக்கும். ஆனால் தற்போது இரண்டு லிட்டருக்கும் குறைவான அளவில் தண்ணீர் இருப்பதாகவும்,  உணவு பொருட்கள்  பற்றா குறையும்,  மருந்து பற்றாகுறையும் உச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் காசா எல்லையிலிருந்து தற்போது 20 டிரக் லாரிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ள.  இது கடலின் ஒரு துளி எந்த அளவுக்கு இருக்குமோ அந்த அளவிற்கு…  இது யானை பசிக்கு சோள பொரி என்பது போல தற்போது 23 லட்சம் வசிக்கும் மக்களுக்கு வெறும் 20 டிரக் லாரிகள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் தெரிவித்துள்ளது.