கடந்த ஏழாம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி தரைவழியாகவும் இஸ்ரேலுக்குள் புகுந்து ஏராளமானோரை சுட்டு கொலை செய்ததோடு 200 பேரை கைதிகளாக சிறை பிடித்தனர். இதனால் இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடங்கியது.

15 நாட்களாக நீடித்து வரும் இந்த போரில் ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனிடையே ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பினைக் கைதிகளை பிடிக்க வேண்டும் என உலக நாடுகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த இரண்டு பிணை கைதிகளை விடுதலை செய்துள்ளனர்.