இந்தியர்களைப் பொறுத்தவரை ‘Lifehack’ என்பது வெறும் சொல் அல்ல, அது ஒரு தனிப்பெரும் கலை. எதிலுமே புதுமையான மாற்று வழிகளைக் கண்டுபிடிப்பதில் இந்தியர்களுக்கு நிகர் யாருமில்லை. சாதாரணமாக எந்த வேலையும் இங்கு நடப்பதில்லை. விலையுயர்ந்த பொருள்களைக் கூட இங்கு மலிவான விலையில் மாற்று வழியைக் கொண்டு உருவாக்க முடியும்.
जुगाड़ में भारतीयों को कोई मुक़ाबला नहीं ❤️
एक तरफ़ के दोनों टायर ख़राब होने के बावजूद इन्होंने ये जुगाड़ लगा लिया 🤗😄
True geniuses are those who discover solutions even in extreme adversity… pic.twitter.com/5PRG5rfi31
— Major Surendra Poonia (@MajorPoonia) December 6, 2025
தற்போது, சமூக ஊடகங்களில் ‘Lifehack’ சம்பந்தப்பட்ட காணொலி ஒன்று பரவி வருகிறது. ஓர் இழுப்பு வண்டியின் டயர் எதிர்பாராதவிதமாக பஞ்சரான நிலையில், ஓட்டுநரிடம் மாற்று டயர் இல்லாததால், அவர் ஒரு புதுமையான யுக்தியைக் கையாண்டார். டயர் இல்லாமலேயே வண்டி சாலையில் சீராகச் சென்றதைக்கண்டு அங்கிருந்த அனைவரும் வியந்துபோயினர்.
வைரலாகும் காணொலியில், ஓட்டுநர் இழுப்பு வண்டியின் பின் சக்கரத்திற்குப் பதிலாக ஒரு தடிமனான மரக்கட்டையை இணைத்து, மிகவும் சுலபமாக வண்டியை ஓட்டிச் செல்வதைக் காண முடிகிறது. இத்தகைய நூதனமான மாற்று வழியை நீங்கள் இதற்கு முன் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்த காணொலியைப் பகிர்ந்தவர், “இந்தியாவில் ‘lifehack’ என்பது ஒரு வெறும் பொருள் அல்ல, அது ஒரு கலை.
நீங்கள் இப்போது பார்ப்பது ‘lifehack’ முனைவர் பட்டம் பெற்றதற்குச் சமம். இவருடைய வண்டியின் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. மாற்று டயரும் இல்லை. ஆனால், அருகில் இருந்த மரத்தை வெட்டி அதன் கிளையை சக்கரத்திற்குப் பதிலாகக் கட்டி வண்டியை ஓட்டியுள்ளார். வண்டி செல்கிறதா அல்லது இவருடைய மூளை செயல்படுகிறதா என்று அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த காணொலி ஆயிரக்கணக்கான பார்வைகளையும் பல எதிர்வினைகளையும் பெற்றுள்ளது.
