OnePlus, Realme நிறுவனங்கள் இந்தியாவில் டிவி விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனங்கள் டிவி உற்பத்தியை ஏற்கனவே நிறுத்தி உள்ளதாகவும், இந்தியாவில் டிவி விற்பனையில் கிடைக்கும் வருவாய் கட்டுபடியாகவில்லை என்றும் கூறப்படுகின்றது. எனினும் இந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களின் உற்பத்தி தொடரும் என்று கூறப்படுகிறது. இது பற்றி இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் தற்போது இந்த தகவல் வெளியாகி உள்ளது.