கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காய்கறி வியாபாரம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காய்கறி வாங்குவதற்காக சுப்பிரமணியன் மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுப்பிரமணியனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சுப்பிரமணியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர் சுப்பிரமணியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.