அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றார். இவர் பதவியேற்பதற்கு முன்பாக அமெரிக்க பாரம்பரியம் படி, துணை ஜனாதிபதியாக வான்ஸ் பொறுப்பேற்றார். அப்போது ராணுவ பீரங்கி குண்டுகள் முழங்கியது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதிகள், உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார். இவர் பதவியேற்ற பிறகு, அடுத்த4 ஆண்டுகளுக்கு என்ன திட்டங்கள் என்பதை குறித்து பேசினார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினருக்கு இரவு உணவுகளை அவர் வழங்கினார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதும் இருந்து விருந்தினர்கள் பலர் சென்றனர். இந்தியாவில் இருந்து முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி ஆகியோர் சென்றிருந்தனர்.
இவர்கள் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் உடன் தனிப்பட்ட முறையில் உணவு அருந்துவதற்காக சென்று உள்ளனர். இதற்காக அவர்கள் பெரிய அளவிலான தொகையை செலவிட்டு உள்ளனர். அதாவது விருந்து நிகழ்ச்சி ஒரு நிதி திரட்டும் நிகழ்வாக அமைந்தது.

இதன்படி 5 வகையான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. குறைந்தபட்சம் 50000 டாலர்கள் முதல் அதிகபட்சம் ஒரு மில்லியன் டாலர்கள் வரை ஆகும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். இதில் ஒரு பில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் 9 கோடி ரூபாய் ஆகும். டிரம்ப் மற்றும் வான்ஸ் இருவரையும் சந்திக்க பெரிய நன்கொடையாளர்கள் ரெட்டிப்பாக தொகையை கொடுக்க வேண்டும். இந்த ஒரு மில்லியன் டாலர் நன்கொடைக்கு ஈடாக வான்ஸுடன் இரவு விருந்து சாப்பிட 2 டிக்கெட்டுகளும், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் டிரம்புடன் உணவு சாப்பிட 6 டிக்கெட்டுகளும் வழங்கப்படும்.

இதற்காக நிறைய பேர் பெரிய தொகையை கொடுத்து டிக்கெட்டை வாங்கியுள்ளனர். அதன்படி 1700 கோடி வரை பணம் திரண்டுள்ளது. இந்த தொகையானது 2000 கோடியை அடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஒரு புதிய சாதனை படைக்கப்படும். டிரம்ப் கடந்த 2017ம் ஆண்டு அதிபராக பொறுப்பேற்கும் போது, இரவு விருந்து நிகழ்ச்சியில் 106 பில்லியன் டாலர் தொகை திரண்டது. அதன் பின்னர் ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு, 135 பில்லியன் டாலர் தொகை கிடைத்தது. இந்த முறை 267 பில்லியன் டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.