விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. இதனையடுத்து ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதால் பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றது. இவர் நடிப்பில் அண்மையில் டான் திரைப்படம் வெளியானது.

இந்நிலையில்  தற்போது சென்னையில் பரவி வரும் காய்ச்சலால் சிவாங்கியும் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர், ‘காய்ச்சல் காரணமாக 2 நாட்களாக எழக்கூட முடியவில்லை. உங்கள் அன்பு என்னை மீண்டும் எழ வைத்துவிட்டது. தற்போது பரவிவரும் காய்ச்சலில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.