தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 89.53 லட்சம் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தமிழகத்தில் மொத்தம் 6,28,69,955 வாக்காளர்கள் இருந்தனர். அதில் 4,58,86,784 பேர் வாக்களித்தனர். இது மொத்த வாக்காளர்களில் 73 சதவீதமாகும்.

வருகிற 2026-ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5,73,43,291 ஆக உள்ளது. இதில் 4,83,89,578 வாக்காளர்கள் மட்டுமே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2021 தேர்தலை ஒப்பிடுகையில், இந்தத் தேர்தலில் சுமார் 25 லட்சம் வாக்காளர்கள் கூடுதலாக வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், 89,53,713 பேர் வாக்குப்பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.