புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விஜய ரெகுநாதபட்டியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 40 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு அமைந்துள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராஜா என்பவர் கிணற்றுக்கு அருகே நடந்து செல்லும் போது எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார்.

இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி ராஜாவை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.