ஓய்வுபெற்ற ரயில்வே போக்குவரத்து அதிகாரி வீட்டில் 8.5 கோடி மதிப்பு உள்ள 17 கிலோ தங்கம், ரூபாய்.1.57 கோடி ரொக்கம் போன்றவற்றை சி.பி.ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். கடந்த வருடம் பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஜெனா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவரது அஞ்சல் துறை வைப்புநிதி ரூபாய்.2.5 கோடியாக இருக்கிறது. ஜெனாவுக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பெரும்பாலான சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், தொடர்ந்து சோதனை நடந்து வருவதாகவும் சிபிஐ அதிகாரி தெரிவித்து உள்ளார். ரயில்வேத் துறையில் ஜெனா(60) ரயில்வே கூடுதல் மண்டல மேலாளர், சரக்கு போக்குவரத்து முதன்மை மேலாளர் உள்பட பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 1989-ம் ஆண்டு ரயில்வேயில் பணியில் சேர்ந்த ஜெனா, 2022ம் வருடம் இறுதியில் பணி ஓய்வு பெற்றுள்ளார். 2005-ம் வருடம் வரை இவர்களது சொத்துமதிப்பு வெறும் ரூபாய்.4.53 லட்சம் தான். ஆனால் இதுவே 2020ம் வருடம் ரூபாய்.4.28 கோடியாக உயர்ந்து உள்ளது. அதோடு இதே காலக்கட்டத்தில் இவர்களது செலவுகளும் பல்வேறு கோடிகளை தொட்டிருப்பதாக முதல் கட்ட விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர். இவர்களது பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு மட்டும் ரூபாய்.88.58 லட்சம் செலவிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.