சமூக வலைதளங்களில் தினமும் பல வினோத வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ரிவர் ராஃப்டிங் (River Rafting) செய்யச் சென்ற இளம்பெண் ஒருவரின் வீடியோ நெட்டிசன்களைச் சிரிக்க வைத்துள்ளது.
வீடியோவின் ஆரம்பத்தில், அந்தப் பெண் ஹெல்மெட், லைஃப் ஜாக்கெட் என எல்லா பாதுகாப்பு உபகரணங்களையும் அணிந்து கொண்டு, ஏதோ பெரிய சாதனை செய்யப் போவது போன்ற அதீத நம்பிக்கையுடனும், ‘கெத்து’ உடனும் காட்சியளிக்கிறார்.
View this post on Instagram
ஆனால், படகு ஆற்றின் வேகமான நீரோட்டத்தில் இறங்கிய அடுத்த நொடியே, அவரிடம் இருந்த அந்த ‘கெத்து’ எல்லாம் காணாமல் போய்விட்டது. தண்ணீரின் வேகம் மற்றும் சத்தத்தைக் கண்ட அந்தப் பெண், பயத்தில் அலறத் தொடங்கினார்.
“ஐயோ அண்ணா.. என்னை மேல கூட்டிட்டுப் போங்க.. எனக்கு மூச்சு முட்டுது.. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க” என கதறியபடி அந்தப் பெண் கத்தியது பார்ப்பவர்களைச் சிரிக்க வைத்துள்ளது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், “ஆரம்பத்துல அவ்வளவு பில்டப் கொடுத்தீங்களே.. இப்போ இப்படி பயப்படுறீங்களே” என்றும், “இனிமேல் இவர் கனவுல கூட ரிவர் ராஃப்டிங் பக்கம் போகமாட்டார்” என்றும் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
‘chhavvi_off’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது பல லட்சம் பார்வைகளைக் கடந்து இணையத்தை அதிரவைத்து வருகிறது.
