உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் நகரின் முகாபுரா பகுதியில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய 8ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, இப்ராஹிம் (43) என்ற நடுத்தர வயதுடைய நபர் நடுரோட்டிலேயே பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
நவம்பர் 8ஆம் தேதி மாலை 5:15 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், அந்த நபர் மாணவியைக் கடத்தி, தனது சைக்கிளுக்கும் சுவருக்கும் இடையில் பிடித்து, அத்துமீறித் தொட்டுள்ளார்.
उत्तर प्रदेश के मुरादाबाद जिले में मनचले का आतंक. मुगलपुरा थाना क्षेत्र में 8वीं कक्षा में पढ़ने वाली एक छात्रा से अधेड़ व्यक्ति ने छेड़खानी की. मनचले व्यक्ति की शर्मनाक हरकत सीसीटीवी में हुई कैद. पुलिस सीसीटीवी फुटेज के आधार पर आरोपी की तलाश में जुटी…#Uttarpradesh #Moradabad… pic.twitter.com/7u5h3AcVqc
— Nedrick News (@nedricknews) November 17, 2025
உதவிக்காகச் சிறுமி கூச்சலிட்டதை அடுத்து, குற்றவாளி இப்ராஹிம் சைக்கிளில் தப்பியோடினார். வீட்டிற்கு வந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததைக் கூறிய நிலையில், குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்தனர். அந்த வீடியோவில், இப்ராஹிமின் அத்துமீறல் தெளிவாகப் பதிவாகியிருந்ததுடன், சிறுமி தன்னம்பிக்கையுடன் அவனைப் பலமுறை அறைந்து பதிலடி கொடுத்த காட்சியும் இருந்தது.
ஆரம்பத்தில் புகார் பதிவு செய்ய மறுத்த காவல்துறை, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி மூத்த அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்ற பின்னரே, தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளது. தலைமறைவாக உள்ள இப்ராஹிமைக் கைது செய்யப் பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை உறுதி செய்துள்ளது.
