இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்த வால்டர் கே (Walter K) என்ற தென் கொரியக் கலைப்படைப்பாளி (Content Creator), டெல்லியில் தன்னை ஒரு ‘பேராசிரியர்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்ட வயதான நபர் ஒருவரால் மோசடிக்கு உள்ளானதாகப் பரபரப்புத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
தனது பயண அனுபவம் பெரும்பாலும் நேர்மறையாக இருந்தபோதிலும், டெல்லியில் நடந்த இந்தச் சம்பவம் மிகவும் பயமாகவும் வருத்தமாகவும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
டெல்லியில் ஆட்டோ ரிக்ஷாவில் (Auto Rickshaw) சென்றபோது, ஓட்டுநர் சாதாரண கட்டணத்தை விட அதிகமாக ₹3,800 கேட்டதாகவும், பின்னர் ‘பேராசிரியர்’ என்று அறிமுகமான அந்த நபர் பணம் கேட்டுத் தன்னை வற்புறுத்தியதாகவும் வால்டர் தெரிவித்துள்ளார்.
“நான் கிட்டத்தட்ட $100 (₹8,000 க்கும் மேல்) இழந்தேன்,” என்று குறிப்பிட்ட அவர், “டெல்லியைச் சுற்றிக் காட்டுவதாகக் கூறி என் நம்பிக்கையைப் பெற்று, என்னிடம் எல்லாவற்றுக்கும் பணம் செலுத்தும்படி வற்புறுத்தினார்” என்று கூறியுள்ளார்.
தனக்கு ஏற்பட்ட இந்த மோசடியைச் சுமார் ஒரு மணி நேரம் போராடி சமாளித்ததாகவும், பின்னர் உள்ளூர் நண்பர்கள் உதவியுடன் பாதுகாப்பாக வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
