
செய்தியாளிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரையில் பாதாள சாக்கடை அமைப்பதற்கு அண்ணன் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களுடைய ஆணைக்கிணங்க, அன்றைக்கு இருந்த உள்ளாட்சித் துறையின் மேலான உதவியோடு, இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பணிகள் எல்லாம் விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. முடியும் தருவாயில் இருக்கிறது. அதே மாதிரி மதுரையினுடைய கனவாக இருக்கக்கூடிய….
மதுரை மக்களுக்கு வரப் பிரசாதம்….. இன்னும் 50 ஆண்டுகளுக்கு அடுத்த தலைமுறைக்கும் குடிநீர் பிரச்சினையே இல்லை என்ற வரலாற்றைப் படைக்கின்ற வகையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடைய நூற்றாண்டு விழா மதுரையில் நடைபெறுகின்ற போது மதுரை மாநகருக்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 1296 கோடி…. இன்னைக்கு 1500 கோடிக்கு மேல போயிருச்சு….. 1296 கோடியில் அம்ரூத் திட்டத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும், இல்லத்தரசிகள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டியது இல்ல… வீட்டுக்குள்ளேயே தண்ணி பிடிச்சு கிடலாம், அப்படிங்கற அடிப்படையில்…. 82 மேல்நிலைத் தொட்டி மூலமாக, அனைத்து வசதிகளும், அந்த பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
நாங்கள் இந்நேரம் ஆட்சியில் தொடர்ந்து இருந்தால் நிச்சயமாக 2023 டிசம்பரில் நாங்கள் முடித்திருப்போம். இந்த ஒப்பந்தம் அப்படித்தான் போடப்பட்டது. எப்ப அமைச்சர்கூட என்னுடைய சட்டமன்ற உரையில் நான் கேட்கின்ற போது கேள்விக்கு… மாண்புமிகு நகர்ப்புறதுறை அமைச்சர் அவர்கள் சொன்னார்கள்…. உறுதியாக எங்களுடைய முதலமைச்சர் நிச்சயமாக…
நீங்க சொன்னது மாதிரி, 2023குள்ளேயே, டிசம்பருக்குள்ளையோ தொடங்கி வைப்பார்… பகுதியாக தொடங்கி வைப்பார் என சொன்னார். நான் சொன்னேன்… முழுமையாக ஓரளவுக்கு 50% முடிந்த பிறகு திறங்கன்னு சொன்னோம்… இல்ல பகுதி பகுதியாக முடிச்சிருவோம்… விரைவாக முடிச்சிருவோம்னு சொல்லி இருக்காரு… ஆனால் இன்னும் பணிகள் சொன்னாரே ஒழிய, அதற்கான பணிகள் இன்னும் நடக்கவில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார்.