கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையாளருக்கு பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர்-ஹாரன் பயன்படுத்துவதாகவும் புகார் வந்தது. அதன் அடிப்படையில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கோவை காந்திபுரம் டவுன் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயன்படுத்திய 14 ஏர்-ஹாரன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். இதனையடுத்து கூடுதல் கட்டணம் வசூலித்த 2 அரசு பேருந்துகளுக்கும் அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு விதிகளை மீறி வாகனத்தை இயக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.