வெளிநாடு வாழ் இந்தியர்கள் நம் நாட்டில் வீடுகட்ட, வீட்டுக் கடன் வாங்க விரும்பினால் அதற்குரிய செயல்முறை என்ன.?, அவர்கள் எந்தெந்த ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்?, கடனை விரைவாக பெறுவது எப்படி? ஆகியவற்றிற்கான பதில்களை இப்பதிவில் காணலாம். இந்தியாவில் வீடுகட்ட (அ) வாங்க, கடன் வாங்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ), கடனை விரைவாகப் பெற பின்வரும் செயல்முறைகளை மனதில்கொள்ள வேண்டும். கடன் பெறும் செயல் முறையில் மிக முக்கியமான பங்கு ஆவணங்களுக்கும் இருக்கிறது.

எவ்வித பிரச்சனையும் இன்றி கடன் பெற குறிப்பிட்ட ஆவணங்களை தயாராக வைத்திருப்பது உங்களுக்கு நன்மை தரும். உங்களது நேரம் வீணாகாமல் விரைவில் பணிகள் நடந்து முடியும். கடனுக்கு விண்ணப்பிக்கும் என்ஆர்ஐ விண்ணப்பதாரர், அனைத்து விண்ணப்பதாரர்களின் புகைப்படங்கள் உடன் கையொப்பத்துடன் முறையாக பூர்த்திசெய்யப்பட்ட கடன் விண்ணப்பப் படிவத்தை வழங்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமிடுவதற்கும், இதுகுறித்து வங்கியுடன் தொடர்பு கொள்வதற்கும் ஒரு இந்தியக் குடியிருப்பாளருக்கு அங்கீகாரம் வழங்க சட்டப்பூர்வமான பவர் ஆஃப் அட்டர்னி (POA) ஆவணம் தேவை.

உங்கள் சார்பில் சொத்து பரிவர்த்தனையை முடிக்க இந்தியாவில் வசிக்கும் மற்றொரு நபரை பவர் ஆஃப் அட்டர்னி (PoA) அங்கீகரிக்கிறது. நீங்கள் வசிக்கக்கூடிய நாட்டில் தூதரக அதிகாரி (அ)நோட்டரி முன்னிலையில் இந்த PoAல் நீங்கள் கையெழுத்திட வேண்டும். அதோடு இது அவர்களால் சான்று அளிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி அது செல்லுபடியாகும் அடிப்படையில் இந்தியாவிலுள்ள ஒரு துணைப்பதிவாளர் அலுவலகத்தில் தீர்ப்பளிக்கப்பட வேண்டும்

செயல்முறைக்கு தேவையான ஆவணங்கள்

# இந்திய பாஸ்போர்ட், விசாவின் நகல்.

# இந்திய பாஸ்போர்ட் இன்றி வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்து இருந்தால் PIO கார்டு.

# உங்களது பெற்றோர் இந்திய குடிமக்களாக இருந்தால் OCI கார்டு

# தாங்கள் வசிக்கும் நாட்டின் பணி அனுமதி, வேலை ஒப்பந்தம், அப்பாய்ண்ட்மெண்ட் கடிதம்

# சமீபத்திய சம்பளச்சான்றிதழ், கடந்த 6 மாதங்களுக்கான ஊதியச்சீட்டு

# சமீபத்திய வருமானவரி அறிக்கைகள்

# ஒரு ஆண்டிற்கான NRE மற்றும் NRO கணக்குகளின் வங்கி அறிக்கை

தலைப்பு ஆவணங்கள்

# டைட்டில் டீட் (விற்பனையாளர் பெயரில்). சில மாநிலங்களில் நீங்கள் அறிந்திருக்கவேண்டிய குறிப்பிட்ட ஆவணங்கள் இருக்கிறது.

# எடுத்துக்காட்டாக, பெங்களூரில் சொத்து வாங்கினால், நீங்கள் கட்டா சான்றிதழை (விற்பனையாளரின் பெயரில்) சரிபார்க்க வேண்டும்.

# அங்கீகரிக்கப்பட்ட கட்டிட பிளான்,கட்டிட அனுமதி

# ஆகுபேஷன் சான்றிதழ் (தயாராகிய கட்டிடமாக இருந்தால்)

# பழைய உரிமைப்பத்திரங்கள், ஏதேனும் இருந்தால்

# புதுப்பிக்கப்பட்ட என்கம்பரன்ஸ் சான்றிதழ்

# பங்குச் சான்றிதழ் (coo perative housing society-ஆக இருப்பின்)

# சொசைடியில் இருந்து பெறப்பட்ட NOC

# RERA பதிவு (பொருந்தினால்)