இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்கள் section 80 G மூலம் வரிச்சலுகை பெறுகிறார்கள். அதாவது தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்கினால் அதற்கு வரி சலுகை வழங்கப்படும். எனவே நன்கொடை வழங்குபவர்கள் section 80 G விதிமுறையின் கீழ் வரி விலக்கு பெற்றுக் கொள்ளலாம். இந்த விதிமுறையில் தற்போது சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது நன்கொடை பெற்ற நிறுவனங்கள் நன்கொடை பெற்ற ரசீதை சமர்ப்பித்தாலே வரிச்சலுகை வழங்கப்பட்டு விடும்.

ஆனால் தற்போது புதிய விதிமுறையின் படி நன்கொடை வழங்கிய நிறுவனம் மற்றும் நன்கொடை பெற்ற நிறுவனம் இரண்டுமே ரசீதை சமர்ப்பிக்க வேண்டும். நன்கொடை ரசீதுடன் சேர்த்து நன்கொடை சான்றிதழையும் சமர்ப்பிப்பது கட்டாயம். இந்த நன்கொடை சான்றிதழை நன்கொடை பெற்ற நிறுவனம் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நன்கொடை வாங்கிய நிறுவனமும் நன்கொடை கொடுத்த நிறுவனமும் சமர்ப்பித்த ஆவணங்கள் ஒத்துப் போகிறதா என்பது சரிபார்க்கப்படும்.

இரு ஆவணங்களும் ஒத்து போனால் மட்டும்தான் வரிச்சலுகை வழங்கப்படும். நன்கொடை பெறும் நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 31-ஆம் தேதிக்குள் நன்கொடை பெற்ற  விவரங்களை Form 10BD மூலம் வருமானவரித்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு நன்கொடை சான்றிதழை நன்கொடை பெற்ற நிறுவனம் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சான்றிதழை வருமான வரி செலுத்துபவர் தாக்கல் செய்தால் மட்டும் தான் வரிச் சலுகையை பெற முடியும்.