பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 13 தவணைகளை அரசாங்கம் வழங்கி இருக்கிறது. ஏராளமான விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் 14-வது தவணையில் தங்களுக்கு ரூ.2000 தவணையாக கிடைக்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் சில விவசாயிகளுக்கு மட்டும் ரூ.4000 கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் அறிக்கைகளின் படி, 13-வது தவணையில் ரூ.2000 பெறாத விவசாயிகளுக்கு 14-வது தவணையோடு சேர்த்து மொத்தமாக ரூ.4000 வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. பிஎம் கிசான் யோஜனா வாயிலாக 13-வது தவணைக்கான பணம் ஏராளமான விவசாயிகளின் கணக்கில் வரவில்லை. பலரும் வெரிபிகேஷன் பணியை செய்து முடிக்காததால் தவணைத்தொகை கிடைக்காமல் போனது.

இப்போது பெரும்பாலான விவசாயிகள் தங்களது வெரிஃபிகேஷன் செயல்முறையை வெற்றிகரமாக செய்து முடித்து விட்டனர். ஆகவே அந்த விவசாயிகளுக்கு இப்போது ரூ.2000க்கு பதில் ரூ.4000 கிடைக்கும் என கூறப்படுகிறது. எனவே தகுதியுள்ள விவசாயிகள் தங்களது பெயர்களை அதிகாரப்பூர்வமான பிஎம் கிசான் இணையதளத்தில் எளிதாக சரிபார்த்துக்கொள்ளலாம்