நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதேசமயம் பல மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. அதன்படி ஒடிசா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,000-த்தை கடந்தது. அதனால் ஒடிசா மாநிலத்தில் சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு சுகாதார நிறுவனங்களில் கொரோனா பொருத்தமான நடத்தையை பின்பற்றுவதன் ஒரு பகுதியாக இது அனைத்து சுகாதார நிலையங்களிலும் முக கவசங்களின் பயன்பாட்டை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.