இந்தியாவில் ஓய்வூதிய ஊழியர்கள் தங்களின் உயர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும் போது பல சிக்கல்களை சந்திப்பதால் அதனை தீர்ப்பதற்கான முக்கிய சுற்றறிக்கையை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி உயர் ஓய்வூதியத்திற்கான விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்த பின்னர் ஏதாவது பிழை இருந்தால் என்ன செய்வது அல்லது கூட்டு விண்ணப்ப படிவத்தில் ஏதாவது பிழை இருந்தால் என்ன செய்ய வேண்டும்,ஒரு முதலாளி கூட்டு விண்ணப்ப படிவத்தை அங்கீகரிக்கவில்லை என்றால் என்ன செய்வது என்பதற்கான முழு விளக்கத்தையும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதாவது ஓய்வூதிய ஊழியர்கள் உயர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்த பின்னர் விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படும். அதன் பிறகு EPFOஅமைப்பால் அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை வழங்குவதற்கான உத்தரவு வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து கூட்டு விண்ணப்ப படிவம் முதலாளி அவர்களால் அங்கீகரிக்கப்படவில்லை என்றால் முதலாளிக்கு அதனை திருத்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அந்த ஒரு மாத காலத்திற்குள் பிழைகள் அனைத்தும் திருத்தப்பட்டு ஓய்வூதியதாரர்களுக்கான அறிவிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.