இந்தியாவில் பெரும்பாலான முதியவர்கள் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் நல்ல வட்டியை தருவதால் இது ஒரு சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறும் மூத்த குடிமக்கள் வட்டி வருமானத்துக்கு டிடிஎஸ் வரி வசூலிக்க கூடாது என்பதற்காக Form 15G, Form 15H வடிவங்களை வங்கிகளில் சமர்ப்பிக்கிறார்கள்.

இதில் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் Form 15 G படிவத்தையும் 60 வயது தாண்டியவர்கள் Form 15 H படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி டிடிஎஸ் வரி வசூலிக்கக்கூடாது என்பதற்காக முதியவர்கள் சமர்ப்பிக்கும் இரு படிவங்களையும் இனி செல்போனில் வாட்ஸ்அப் மூலமாகவே அனுப்பலாம் என அறிவித்துள்ளது. அதன்படி யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய whatsapp மூலமாக 9666606060 என்ற நம்பருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். மேலும் இந்த whatsapp சேவை மூலம் சீனியர் சிட்டிசன்களுக்கு அலைச்சல் குறையும்.