வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணியான நாய்களை கொஞ்சி, முத்தமிட தான் நேரம் உள்ளது. ஆனால் அதை குளிப்பாட்டி காய வைத்து, முடி திருத்தம் செய்வதற்கெல்லாம் நேரமில்லை. பூனே, புதுடெல்லி, பெங்களூர், ஹைதராபாத் மாநகரங்களில் செல்லப்பிராணிகளுக்காக அழகு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த புது தொழில் மூலம் பல லட்சங்களை ஈட்டி வருகின்றனர். சராசரியாக ஒரு நாய்க்கு 1000 முதல் 4000 வரை வசூலிக்கின்றனர். இவர்கள் நாய்களை நடைப்பயிற்சி அழைத்து செல்வதற்கு சில வேலை ஆட்களை வைத்து உள்ளனர். ஆனால் அவர்களால் நாய்களை சராசரியாக பராமரிக்க முடிவதில்லை. இதனை அறிந்த வாலிபர் ஒருவர் வாகனம் ஒன்றை வாங்கி, அதில் நாய்க்கு தேவையான வாசன திரவியங்களை எல்லாம் பொருத்தி வைத்துள்ளார்.

அதோடு எந்தெந்த சேவைகளுக்கு எவ்வளவு கட்டணம் என்றும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வாலிபரை தொடர்பு கொண்டால் போதும், அடுத்த 10 நிமிடங்களில் வீட்டிற்கு முன்பு நடமாடும் அழகு நிலையம் வாகனம் வந்துவிடும். அவரிடம் செல்லப் பிராணிக்கு என்னென்ன சேவைகள் செய்ய வேண்டும் என்று தெரிவித்தால் போதும். உடனடியாக நாய்களுக்கு மசாஜ் செய்தால், குளிப்பாட்டுதல், நகம் வெட்டுதல், முடியை திருத்தம் செய்தல், நாய்க்கு பல் துலக்குதல் உள்ளிட்ட செய்திகளை செய்கின்றனர். அதற்கு ஏற்றவாறு கட்டடம் வாங்கிக் கொள்கின்றனர். நாய் வளர்ப்பவர்களுக்கு இது மிகவும் சுலபமாக உள்ளது. இதற்கு அதிகப்படியான வரவேற்பும் கிடைத்துள்ளது. மனிதர்கள் மட்டும் பயன்படுத்தி வந்தால் அழகு நிலையம், தற்போது நாய்களுக்கும் தொடங்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.