உத்திர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சத் பூஜை என்று ஒரு முக்கியமான பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இது சூரிய கடவுளின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த பூஜையின் போது பக்தர்கள் உண்ணா நோன்பு, சூரியனுக்கு பிராத்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் நின்று தியாகம் செய்தல் என்று 4 சடங்குகளை செய்கின்றனர்.

இந்த ஆண்டுக்கான சத் பூஜை கடந்த 5ம் தேதி தொடங்கி வருகிற 8ம் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் நடைபெறுகிறது. கடந்த 5ம் தேதி அன்று பக்தர்கள் நதிக்கரை கடல் அல்லது நீர் நிலைகளில் நீராடி, அதன் பின்பு உணவு எடுத்து கொள்கின்றனர். டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் உள்ள யமுனை ஆற்றில் ரசாயன நச்சுனுறை மிதந்து செல்கின்றது. இந்நிலையில் சத் பூஜைக்காக பெண்கள் யமுனை ஆற்றில் நீராடி உள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.