தெலுங்கானா மாநிலம் பாலாப்பூரில் முகமது அமீர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தொழில் அதிபர். இவரது குடும்பத்தில் ஒரு நிச்சயதார்த்த விழா நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு திருநங்கைகளை அவர் அழைத்திருந்தார். அதன்படி அந்த விழாவிற்கு வந்த திருநங்கைகள் சினிமா பாடல்களுக்கு ஆபாசமாக நடனம் ஆடி உள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இது குறித்து பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். அதோடு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சிகளில் நடனமாடிய திருநங்கைகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.