
கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் சிலர் தண்ணீரை வீணாக்குகின்றனர். இதனை தடுப்பதற்காக ஒரு பிளம்பர் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நீர் குழாயை சாதாரணமாக திறந்து மூட முடியாமல் சாவி ஒன்றை வைத்து தேவையான நீரை பயன்படுத்தி விட்டு அதன் பின் சாவியால் நிறுத்தும்படி உள்ளது. இதனால் ஒரு சொட்டு தண்ணீர் கூட வெளியே வராது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதோடு சிலர் உரிமை இல்லாமல் தண்ணீர் எடுத்து செல்வதை இந்த கண்டுபிடிப்பு மூலம் தடுக்க முடியும். தற்போது பிளம்பர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் ஒருவர் “ஒரு விஞ்ஞானமிக்க கண்டுபிடிப்பு” என்று கூறி “அவருக்கு இன்ஜினியரிங் பட்டம் தரப்பட வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். இன்னொருவர் “பாய்சாப்…இது ஒரு வேற லெவல் ஜூகாத்” என்று கூறினார். மேலும் இந்த கண்டுபிடிப்பு நீரின் அவசியத்தினை எடுத்துரைக்கும் வகையில் இருப்பதால் பிளம்பரின் இந்த அரிய முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.