இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் எதிர்பார்க்காத விதமாக நடக்கும் சில வீடியோக்கள் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்தாலும் நகைச்சுவையாகவும் மாறிவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒருவர் கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு கருப்பு நிற பாம்பு தண்ணீரில் மிதந்து வந்தது.
அவர் சுதாகரிப்பதற்குள் பாம்பு அவரை நெருங்கிய நிலையில் அவரது கையை பின்னிப் பிணைந்தது. அவர் எப்படியோ முயற்சித்து அந்த பாம்பை தண்ணீரில் வீசிவிட்டு தப்பிவிட்டார். அவருக்கு எதுவும் ஆகாத நிலையில் பின்னர் கிணற்றில் இருந்து வெளியேறினார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ऐसे समय में धैर्य से काम लेना चाहिए। pic.twitter.com/lE4933ELKe
— Dr. Sheetal yadav (@Sheetal2242) May 17, 2025
