
ஓபிஎஸ் சார்பில் நடந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய நிர்வாகி ஒருவர், இன்னைக்கு 4 லட்சம் தொண்டர்கள் நின்னுட்டு இருகாங்க. அதனால சொல்லுறேன், தென் மாவட்டத்துல இருந்து ஒரு வண்டிகூட அவங்களால கூப்பிட முடியல. பல ஊர்களுக்கு சென்று, தொண்டர்களை கூப்பிட வழியில்லாமல்… 100 நாள் வேலைக்கு சென்ற ஒப்பந்ததாரரிடம் சென்று ஆட்களை ஏற்றி கொண்டு இருந்தார்கள். தென்மாவட்டத்தின் நிகழ்வு இதுதான்.
தைரியமா இருங்க. தென் மாவட்டத்திலே எடப்பாடி பழனிச்சாமி அல்ல அவருடைய சகாக்கள் அரசியல் இதோடு அஸ்தமனம் ஆகிவிட்டது என்பதை உங்களுக்கு ஆணித்தரமாக அடித்துச் சொல்லுகிறேன். ஆகவே எதிர்காலம் நம் கையில்… புரட்சித்தலைவராக, வாழும் புரட்சி நாயகனாக, ஜல்லிக்கட்டு நாயகன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
நமக்கெல்லாம் கலங்கரை விளக்கமாக…. கழகத்தை வழி நடத்துவதற்கு தயாராக இருக்கிறார். தைரியமாக இருங்கள் நாளை நமதே, நாற்பதும் நமதே. வருகின்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நல்ல ஒரு எழுச்சியான சூழல் உருவாகி இருக்கிறது. இந்த கூட்டத்தில் இருக்கின்ற எல்லாரும் முதல்ல நீங்க எடப்பாடிக்கு நன்றி சொல்லிடுங்க. காரணம் என்னன்னா…?
இந்த சனியம்புடிச்ச எடப்பாடி, இந்த சனி வேலை செய்யலைன்னா… இங்க நம்ம எல்லாருக்கும் இப்படி ஒரு அரங்கம் கிடைக்காது. நம்ம எல்லாம் தலைவராக முடியாது, புரட்சித்தலைவருடைய அடுத்த தலைமுறை வருவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய் இருக்கு. அந்த வாய்ப்பை ஐயா மூலமாக உருவாக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு ஓ …போட்டுவிட்டு உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை சொல்லி விடைபெறுகிறேன் என பேசினார்.