பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் நபர்  ஒருவருக்கு அட்வைஸ் செய்யும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹாலிவுட் மிகச் சிறந்த இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன். இவர் ஹாலிவுட்-யும் கடந்து  உலக அளவிலும் போற்றப்படக்கூடிய அற்புதமான கலைஞன். பல அறிமுக இயக்குனர்களுக்கும்  அல்லது பல வெற்றி கண்ட இயக்குனர்களுக்கும் கூட இவர்தான் ரோல் மாடல். அதற்கு காரணம் இவருடைய  படைப்புகளையும்கடந்து,

அந்த படைப்புகளை இவர் உருவாக்கக்கூடிய விதம். அதன் மீதான பார்வை ஆகியவை தான். ஒருமுறை கிறிஸ்டோபர் நோலனிடம் நேர்காணல் ஒன்றில் நபர் ஒருவர் என்னுடைய வாழ்க்கை கிறிஸ்டோபர் நோலன் படம் போல் ஒன்றும் புரியாமல் இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த நோலன் ,

அதை புரிந்து கொள்வதற்கு முயற்சிப்பதற்கு பதிலாக உணருங்கள். நீங்கள் உணரும் போது எல்லாம் தானாக புரியும் என தெரிவித்தார். அதேபோல ஆசைப்படுவதும் கனவு காண்பதும் சுலபம்தான். அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் தவறில்லை. அதை அடைய வேண்டும் என்ற பட்சத்தில், கண்டிப்பாக அதற்கு ஏற்றார் போல் உழைக்க வேண்டும் என கூறுவார். இதுவே கிறிஸ்டோபர் நோலன் அவர்களின் தாரக மந்திரமாக திகழ்கிறது.