கங்குவா திரைப்படத்திற்கான Fan Made  போஸ்டர் ஒன்றை  ரசிகர் ஒருவர் வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள கங்குவா  திரைப்படத்திற்கான போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை வெளியான போஸ்டர்கள் அனைத்தும் சூர்யாவின் முகம் தெரியாமல் அவருடைய கை மற்றும் அவர் குதிரையில் செல்வது போன்ற புகைப்படம் அதிலும் அவர் முகம் தெரியவில்லை.

இந்நிலையில் சூர்யாவின் ரசிகர் ஒருவர் கங்குவா திரைப்படத்தில் சூர்யாவின் தோற்றம் இப்படித்தான் இருக்கும் என்ற கற்பனையில் போஸ்டர் ஒன்றை தயார் செய்து அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார். முகம் தெரியும்படி உள்ள அந்த போஸ்டர் பார்ப்பதற்கு  அச்சு அசலாக இதற்கு முன்பு வெளியான புகைப்படங்களுடன் ஒத்துப் போகும் விதமாக மிக தத்ரூபமாக  வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை பார்க்கையில்,

fan made போஸ்டர் என்று சொல்ல முடியாது. படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட புகைப்படம் போன்றே தெரிகிறது. இப்படியான நேர்த்தியான திறமையை வெளிப்படுத்திய அந்த நபருக்கு தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.