செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஆறு வருடம் கழித்து போயிட்டு வந்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது. பயணம் ரொம்ப நல்லபடியா இருந்தது. ஜெயிலர் படத்தை மாபெரும் வெற்றி படமாக்கிய என்னை வாழ வைத்த தெய்வங்கள்,  பொது மக்களுக்கும்,  உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை…

ஒரு நல்ல படத்தை குடுங்க அப்படின்னு சொல்லி ஊக்குவித்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அவர்களுக்கும்,  ஒவ்வொரு சீன்,  ஒவ்வொரு ஃபிரேம் ரசித்து ரசிச்சு இயக்கிய நெல்சன் அவர்களுக்கும்,  திறமையோட வேலை செய்த கலை நுட்ப கலைஞர்களுக்கும்,  நடித்த கலைஞர்களுக்கும்,  ஒரு வெற்றி படத்தை தன்னுடைய அருமையான பாடல்களினாலே பிரமிக்க வைக்கும் பின்னணி இசையால்  மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி படமாக்கிய நம் அனிருத் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது பற்றி ரஜினி கூறுகையில்,  சன்னியாசியாகட்டும் இல்ல, ஒரு யோகியாகட்டும் அவர்கள் வயசுல நம்மள விட சின்னவங்களா இருந்தா கூட அவங்க கால்ல விழறது என்னுடைய பழக்கம்,  அதுதான் செஞ்சேன். வரப்போகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியா என்ற கேள்விக்கு,  ரஜினி அவர்கள் அரசியலா சாரி, அரசியல பேச விரும்பல நன்றி வணக்கம் என்று விடை பெற்று விட்டார்.