கேரள மாநில கல்வித்துறையின் தொழில்நுட்ப பிரிவான கேரள கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்பில் ‘சம்பூர்ண பிளஸ்’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி மாணவர்களின் வருகைப்பதிவு உள்ளிட்ட தகவல்களை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள முடியும். இதில் மாணவர்களின் வருகை பதிவேடு, தேர்வில் அவர்கள் பெரும் மதிப்பெண்கள், விளையாட்டுப் போட்டிகளில் அவர்களின் ஈடுபாடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் மாநிலம் முழுவதும் 12,943 பள்ளிகளில் படிக்கும் 36.44 லட்சம் மாணவர்களின் தகவல்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மொபைல் செயலி சேவை சமீபத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்புதிய சேவை மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.