கேடி திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் தமன்னா. இதையடுத்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் தமன்னா. இப்போது இவர் நெல்சன் திலீப்குமார் டைரக்டில் உருவாகும் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார்.

இவர் நடித்திருக்கும் “லஸ்ட் ஸ்டோரிஸ் 2” தொடர் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இத்தொடரில் தமன்னா கவர்ச்சியாக நடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி இதை பலரும் விமர்சித்து வருகின்றனர். அதோடு தமன்னா நடிப்பில் இப்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள “ஜி கர்தா” வெப் தொடரிலும் தமன்னா அளவுக்கு மிஞ்சிய ஆபாச காட்சிகளிலும், படுக்கையறை காட்சிகளிலும் நடித்து உள்ளார்.

இது தொடர்பாக தமன்னா விளக்கமளித்ததாவது “கதைக்கு தேவையாக இருந்ததால் நெருக்கமான காட்சிகளில் நடித்தேன். ஜி கர்தா வெப் தொடர் பள்ளி பருவத்து காதல் கதை ஆகும். ஆகவே அந்த கதைக்கு நெருக்கமான காட்சிகள் தேவை என்பதால் நடித்தேன்” என அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.