நெல்லை சந்திப்பில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில் ஞாயிறு தோறும் இரவு 7.20 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயிலானது சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் வழியாக தாம்பரம் செல்கிறது. மேலும் மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு இதே வழிதடத்தில் நெல்லை சந்திப்பை வந்து சேர்கிறது.

இந்நிலையில் நெல்லை-தாம்பரம் சிறப்பு ரெயிலுக்கு கடையம் ரெயில் நிலையத்தில் கடந்த 8-ஆம் தேதி பெரிய அளவு முன்பதிவில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. அதாவது  கடையத்தில் இருந்து தாம்பரம் செல்வதற்கு மட்டும், 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியில் 111 பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். இவ்வாறு அதிகபட்ச முன்பதிவில் கடையம் 3-வது இடத்தை பிடித்துள்ளனர்.

இந்நிலையில் 2 தினங்களுக்கு  முன்பும், தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு வந்த ரெயிலில் கடையம் பகுதியை சேர்ந்தவர்கள் 104 பேர் பயணித்து, அதிகபட்ச முன்பதிவில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் தென்காசியை விட கடையத்தில் முன்பதிவு செய்து பயணித்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

இதனையடுத்து இந்த ஜனவரி மாதத்துடன் இந்த சிறப்பு ரெயிலின் இயக்கம்   முடிவடைகிறது. எனவே இந்த ரெயிலை தொடர்ந்து நிரந்தர ரெயிலாக இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.