திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  கடந்த ஆட்சி காலத்தில் நீட்டிற்கு எதிரான மசோதா திருப்பி அனுப்பப்பட்ட தகவல் கூட சொல்லவில்லை என்கின்ற செய்தி இந்த மேடையில் பகிரப்பட்டது. இன்றைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்துக்கொண்டுள்ள தீவிரமான நடவடிக்கையின் காரணமாக….. அவர் எப்பொழுது எல்லாம் ஒன்றிய அரசின் பிரதமரையோ,

அமைச்சரையும் சந்திக்கிறதோ அப்பொழுது எல்லாம் கூட  நேரடியாக நீட்டிலிருந்து விலக்கு கிடைக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவது மட்டுமல்லாமல்,  தொடர்ந்து ஏராளமான முறை  கடிதம் வாயிலாகவும் வலியுறுத்தி வருகின்றார். அதோடு மட்டுமல்ல நம்முடைய இளைஞரணி  செயலாளர் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஒன்றிய அரசின் பிரதமரை  சந்திக்க கூடிய  வாய்ப்பு கிடைத்த போது, அவர் வைத்த முதல் கோரிக்கையும் கூட நீட்டுக்கு விலக்கு கிடைக்க வேண்டும் என்பதுதான்.

இப்படி பல முயற்சிகள் தொடர்ந்து எடுத்துக்கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான்,  குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட நம்முடைய மசோதா….  திரும்பத் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்படவில்லை. திரும்ப தமிழ்நாட்டிற்கு நாங்கள் அதை திருப்பி அனுப்பி இருக்கின்றோம் என்ற தகவலோடு இல்லாமல், உள்துறை அமைச்சகத்தில் இருந்து ஒரு மூன்று துறைகளுக்கு தொடர்ந்து திருப்பி திருப்பி அனுப்பி கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் அனுப்புகின்ற   திருப்பி என்பது…. விளக்கம் கேட்டு திரும்ப அனுப்புகின்றார்கள். ஆயுஷ் அமைச்சகத்துக்கு…. சுகாதாரத்துறைக்கு….  உயர்கல்வித்துறைக்கு….   மூன்று துறைகளுக்கு தொடர்ந்து 4 , 5 முறை திரும்ப திரும்ப கடிதங்கள் வந்து கொண்டே இருக்கின்றது.  திரும்ப திரும்பவும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், சட்டவல்லுனர்களுடன் கலந்து பேசி, அவர்களுக்கான பதிலை  அனுப்பிக் கொண்டு இருக்கின்றார்.

இந்த பதில் திருப்திகரமான பதில்தான் என்றாலும்  கூட,  டெல்லியில் இருக்கின்ற உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கு பதில் புரியாமல் இல்லை. பதிலில்  இருக்கின்ற உண்மைகள் தெரியாமல் இல்லை…  ஆனாலும் தொடர்ந்து திரும்ப திரும்ப  அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி நான்கு ஐந்து முறை தமிழகத்திற்கு திரும்பவும் வந்து… திரும்பவும் அந்த கிளரிஃபிகேஷன் திருத்தி அனுப்பபட்டுக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.