அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்த தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, இருவரும் முக்கியமான அரசியல் ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னையில் இன்று (செப்டம்பர் 23) செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “அரசியல் நிலவரம் குறித்தும், எதிர்கால வேலைத்திட்டங்களைப் பற்றியும் டிடிவி தினகரனுடன் விரிவாகப் பேசினேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) மீண்டும் இணைய அவரிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் அதை ஏற்கும் முடிவு அவருடையது,” என்று தெரிவித்தார்.

மேலும், “அரசியலில் நிரந்தர எதிரி யாரும் இல்லை. நிலைப்பாடுகள், சூழ்நிலைகள் மாற்றமடையும். எனவே, எந்தவொரு தனிநபரையோ, கட்சியையோ நிரந்தரமாக எதிரியென கூற முடியாது.

டிடிவி தினகரனை NDA-வில் இணைப்பது குறித்த முடிவை அவர் எடுப்பார். இந்த உரையாடல், தமிழக அரசியலில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.