பட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) தற்போது கட்சித் தலைமையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள உள்நிலை மோதல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையில் கட்சி உரிமை தொடர்பான கருத்து வேறுபாடு தீவிரமாகியுள்ளது. தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், பாமக தலைமை உரிமை அன்புமணிக்கே உள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக அன்புமணி தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இதனையே எதிர்த்து, டாக்டர் ராமதாஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாக மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (செப்.23) காலை திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் டாக்டர் ராமதாஸ் அவசர ஆலோசனையை தொடங்கியுள்ளார்.
பாமக நிலவரம் மற்றும் கட்சி உரிமை விவகாரத்தை மையமாகக் கொண்டு இந்த ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற நாட்களில் கட்சி உள்நிலை குழப்பம் மேலும் தீவிரமாகும் நிலை உருவாகியுள்ளதால், இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
