திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று (செப்டம்பர் 23) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கியமான ஆலோசனைகளை வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, டெல்லியில் திமுக எம்பிக்கள் சந்தித்து வரும் சவால்கள் மற்றும் நடப்புச் சூழ்நிலையைப் பற்றியும் ஸ்டாலின் கேட்டு அறிந்ததாக கூறப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு திமுக எம்பிக்களுக்கும் தமிழகத்தில் உள்ள மூன்று அல்லது நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தந்த தொகுதிகளில் செயல்படும் மாவட்டச் செயலாளர்களுடன் இணைந்து நிச்சயமாக செயல்பட வேண்டும் என கட்சி தலைமை ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.